NEWS

அன்பே சிவம் அறநெறிப்பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு

08 .12. 2020 அன்று செவ்வாய்கிழமை காலை , திரிகோணமலை வெருகல் முகத்துவாரத்தில் சூரநகர்ப்பகுதியில் தென்கயிலை ஆதீனத்தால் அன்பே சிவம் அறநெறிப்பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம் பெற்றது. தென்கயிலை ஆதீன முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான் ,மனோஜ் ஐயா, சசி ஐயா ஆகியோரால் அடிக்கல் நாட்டு நிகழ்வுப் பூசைகள் இடம் பெற்றன.

முதலில் அன்பேசிவம் அறநெறிப்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல்லை குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் நாட்டியதைத் தொடர்ந்து , இளையபட்டம் தவத்திரு.திருமூலர் தம்பிரான், பிரதேச சபை உறுப்பினர் திரு.ஞானகணேசன் ஆகியோர் மற்றும் முக்கியமானவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

மேற்படி, அன்பேசிவம் அறநெறிப்பள்ளி கட்டிடத்திற்கான் நன்கொடையை இலண்டன் IYKONS நிறுவன உரிமையாளர் திரு. குலசேகரம் ஜெயராஜ் அவர்கள் வழங்கியுள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தி.