NEWS

சிவ ஒளி இணையத்தளம் அறிமுகம்

தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களால் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகைத் திருநாள் அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

திரிகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் ஆன்மீக மின்னிதழான சிவ ஒளியின் இணையத்தளம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கயிலை சிவன் மலையில் எழுந்தருளியிருக்கும் லலிதாம்பாள் உடனுறை பேரானந்தீச்சரர் ஆலயத்தில் சிவ ஒளி இணையத்தின் அறிமுகத்திற்கான சிறப்புப் பூசைகள் இடம் பெற்றன.

முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் ஏற்பாடு செய்யப் பட்ட சிறப்புப் பூசையில், இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான் அடிகளாரும் ஆதீனத்தின் செந்தமிழாகம அருட்சுனைஞர் மனோஜ் ஐயா அவர்களும் கலந்து கொண்டு பூசையை இயற்றி வைத்தனர்.
சிறப்புப் பூசையின் நிறைவில் முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளார் தனது ஞானக்கரங்களால் சிவ ஒளி ஆன்மீக மின்னிதழ் இணையத் தளத்தை கணனி யுகத்திற்கு முதன் முதலில் அறிமுகமாக்கி வைத்தார்.

இவ்விணைணயத்தளத்திவ் சிவஒளி மின்னிதழின் அனைத்து வெளியீடுகளும் அனைவரும் வாசிக்கக் கூடிய முறையில் உருவாக்கம் பெற்றுள்ளது. அத்துடன் தென்கயிலை ஆதீனத்தின் ஆன்மீகம்,சமூகம்,கல்விசார் விரிவாக்கத் திட்டங்கள் இணைப்புச் செய்யப்பட வுள்ளன.

மேலும் இலங்கையில் இந்து தர்மாசிரியர் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி, அவர்களுக்கு உதவும் வகையில் சிவ ஒளி இணையத்தில் தர்மாசிரியர் பரீட்சை வழிகாட்டி என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.