NEWS

தென்கயிலை ஆதீனத்ததால் மேலும் 50 போசாக்கற்ற சிறுவர்களுக்கு நவபோசா போசாக்கு உணவு வழங்கப்பட்டது

ஓம் நமசிவாய .
புதன்கிழமை 30 12 2020 வாகரைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி,புதூர்க் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தென்கயிலை ஆதீனத்ததால் மேலும் 50 போசாக்கற்ற சிறுவர்களுக்கு நவபோசா போசாக்கு உணவு வழங்கப்பட்டது,

தென்கயிலை ஆதீனத்தின் போசாக்கு வழங்கும் திட்டத்தினை வாகரைப் பிரதேச செயலர் திரு.சுப்பிரமணியம் கரன் அவர்களின் பணிப்பின் பேரில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு அழகுராஜ் தலைமையில்,வெளிநாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சயன்ஒளி, மற்றும் முக்கிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மேற்படி நவபோச போசாக்கு உணவினை சிறார்களின் தாய்மார்களிடம் கையளித்தனர்.

அதே வேளை தென்கயிலை ஆதீனத்தால் 2021 தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களுக்கான 1100 போசாக்கற்ற சிறுவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் திருகோணமலை கன்னியா,பாட்டாளி புரம், வெருகல் முகத்துவாரம்,பொலநறுவை,திருக்கோயில் ,செங்கலடி,வாகரை ,கிரான் ஆகிய பிரதேசத்தில் வழங்கப்படவுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்.

நல்லுள்ளங்கொண்ட நன்கொடையாளர்களின் உதவியோடும் ஒத்துழைப்படனும் இப் பாரிய திட்டத்தை தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவம்