NEWS

தென்கயிலை ஆதீனத்தால் பனங்கிழங்கு செய்கை ஊக்கத்திற்கான நிதியுதவி

திருகோணமலை ஈச்சிலம்பத்தை பிரதேசத்தில் இலங்கைத்துறை என்னும் இடத்தில் தென்கயிலை ஆதீனத்தால் பனங்கிழங்கு செய்கைக்கு ஊக்கமளிக்கும் முகமாக 20 குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு நிதி கையளிக்கப்பட்டது.

தென்கயிலை ஆதீனத்தின் இலங்கைத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நிசாந்தன் மூலம் மேற்படி நிதி கையளிக்கப்பட்டது.

தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு சந்நிதானம் தலைமையில் இலங்கைத் துறையை நோக்கிய கிராம தரிசனம் நிகழ்வின்போது மேற்படி பனங்கிழங்கு செய்கை பற்றி அக்கறை செலுத்தப்பட்டது. அங்குள்ள பனம் விதைகளை குப்பையுடன் கூட்டி நெருப்பு வைத்து கொளுத்தும் நிலையறிந்த பின்னர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் ஆதீனத்தால் நிதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 15 12 2020 அன்று 20 குடும்பங்களுக்கு பனம்கிழங்கு செய்கைக்குரிய ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.