NEWS

தென்கயிலை கல்வி நிலையம் (TEC )உயர்தர மாணவர்களுக்கு நிதியுதவி

10 02 2021 புதன்கிழை தென்கயிலை கல்வி நிலையம் இலங்கைத்துறையில் வருமானம் அற்ற குடும்பத்தின் உயர் தர மாணவ மாணவிகளுக்கு  மேற்படிப்பிற்காக நிதி உதவி வழங்கியது.

திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின்  தென்கயிலை கல்வி நிலையத்தால் ( Thenkailai Education Centre – TEC ) ஈச்சிலம்பற்று  இலங்கைத்துறையைச் சேர்ந்த பதினொரு உயர்தர மாணவ மாணவிகளுக்கு கல்வியை மேற்கொண்டு படிப்பதற்காக நிதியுதவி  வழங்கப்பட்டது.

டீசம்பர் 2020 தொடக்கம் ஓகஸ்ட் 2021 வரையிலான ஒன்பது மாதங்களுக்கு மாதாந்தம் 1500 இலங்கை ரூபா விகிதம் பதினொரு மாணவ மாணவிகளுக்கு நிதியுதவியினை வழங்கி வருகின்றது.

மேற்படி நிதியுதவியினை பிரான்சில் ஆர்ஜென்ரயில் என்னும் இடத்தில் வசிக்கும் உதயகுமார் குடும்பம் பொறுப்பேற்றுள்ளது. எதிர்காலச் சந்ததி கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆத்மார்த்தமான எண்ணத்தில் இந்த உதவியினை பல கஸ்ரத்தின் மத்தியிலும் அவர்கள் உதவி செய்ய முன் வந்ததையிட்டு தென்கயிலை ஆதீனம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..

தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான் அடிகளர், அதிபர் திரு.தயாபரன் ,தென்கயிலை கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.நிசாந்தன் ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.