NEWS

நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள் தென்கயிலை வருகை

2020 அக்டோபர் ஐந்தாம் திகதி தென்கயிலை ஆதீனம் மகிழ்ச்சியில் திளைத்தது. என்றுமில்லா தவாறு குருமார்களும் ஏனையவர்களும் நீணட காலப் பிரிந்த உறவை சந்திக்கும் நிலையில் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். உண்மை … முதன் முறையாக நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள் தென்கயிலை ஆதீனத்திற்கு வருகை தந்து கொஞ்ச நாள் சுவாமியுடன் தங்க வேண்டுமென்ற வேலன் சுவாமிகளின் ஆசை நிறைவேறும் தருணம் அது.
 
இன்றைய தினம் மேலும் ஒரு சிறப்பு நிகழ்வு இடம் பெற்றது. நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் தென்கயிலை ஆதீனத்திற்கு முதற்தடவையாக வருகை தந்து  பூசை நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அன்று ஏழு லிங்கங்கள் தென்கயிலை ஆதீனம் சிவன் மலையில் உயிர்ச்சக்தி கொடுக்கப்பட்டு அமர்தப்பட்டுள்ளன. கார்த்திகேசநாதர், குமாரலிங்கேச்சரர், விபூதிநாதர், கதிர்காமநாதர், சச்சிதானந்தர், இராமேசுவரர், கஜமுகலிங்கேச்சரர் ஆகிய லிங்கப்பெருமான்களுக்கு உயிர்ச்சக்தி கொடுக்கப்பட்டது. அதேவேளை … சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புக்குரிய கலியுகவரதன் ஐயாவும் இப்பூசையில் கலந்து கொண்டமையும் சிறப்பு அம்சமாகும்.
  
துறவிகள் மூன்று நாட்கள் ஒன்று சேர்ந்து தங்கியிருந்து கதைப்பது என்பது அற்புதமான தருணங்களாகும். அத்தருணங்கள் யாவும் சிவப்பரம்பொருளின் சித்தமே.
முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார், நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள், இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான் , ஆகியோர் கலந்து கொண்ட லிங்க பூசையை, செந்தமிழாகம தலைமை அருட்சுனைஞர் உயிரொளி சிவம் பிரதாபனார் , செந்தமிழாகம அருட்சுனைஞர் தயாளன் ஐயா, உதவி அருட்சுனைஞர்கள் மனோஜ் ஐயா, இளங்கோ ஐயா ஆகியோர் இயற்றி வைத்தனர்.
அன்பே சிவம் .