NEWS

நீடு பணி செய்யட்டும் சிவ ஒளி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சோதியாய் நெடுதுயர்ந்து நின்ற ஆதியாம் பரம் பொருள்.
பாதியில் மாதுமை வைத்த பெயர் இறை பொருள் .
பொருளுக்கு பொருள் கொடுக்கும் எங்கள் பரமசிவன் அருள் ஒளியில்
மின்னிதழாய் மலர்கிறது சிவஒளி

கடந்த பல திங்கள் மிளிர்ந்த சிவ ஒளி, இணைய வழியாய் மலர்வது இறைவன் அருள் வழியாம்.

பேரானந்தீச்சரராம் கோணேசன் வெளிக் கருணை
லலிதாம்பாள் மாதுமையாள் கை தூவும் தனிக்கருணை இரண்டும்
வையமெங்கும் சிவத்தமிழும் சிவநெறியும் தழைத்திட வழி சமைக்கும் சிவ ஒளிக்கு என்றும் அருள் பொழியும்.

தன் கடன் சிவப்பணியென்று தம்மைக் கொடுத்த படைப்பாளிகள், ஆசிரியர் குழுமம், என்றும் அவனருளால் நிறைந்த இன்பம் பெறும்.

அடியார்க்கு அடியேன் எனும் மெய்மைச் சொல் ஏற்று
அன்பே வடிவான சிவத்தை வேண்டுகிறோம்.

நீடு பணி செய்யட்டும் சிவ ஒளி
நாடி இறை வழி வருவார்க்கு வழி தரட்டும்.

அன்பே சிவம்