NEWS

மீட்சி அறக்கட்டளை ஆதரவுடன் தென்கயிலை ஆதீனத்தால் 150 போசாக்கற்ற சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல்

புதன்கிழமை 16-12-2020 மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கப்பட்டது.

மீட்சி அறக்கட்டளை ஆதரவுடன் தென்கயிலை ஆதீனத்தால் வழங்கப்பட்ட 150 போசாக்கற்ற சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வாகரை, வாகரை மத்தி, கண்டலடி, பால்சேனை, அமந்தனாவெளி ஆகிய கிராமங்களில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டது.
முதலாவதாக வாகரை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலர் திரு. சுப்பிரமணியம் கரன் அவர்களின் தலைமையில் போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார், இளையபட்டம் தவத்திரு. திருமூலர் தம்பிரான் ,தென்கியிலை ஆதீன நிர்வாக உறுப்பினர் இளைப்பாறிய பாடசாலை அதிபர் திருமதி உமா ரதீஷ்வரன், திரு.ரதீஷ்வரன் , செந்தமிழாகம அருட்சுனைஞர் மனோஜ் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் திரு அழகுராஜ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் திரு.உமேஷ், சிறுவர் உளநல உத்தியோகஸ்தர் திருமதி.எஸ்.சுதாஜினி, வெளிநாட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.சயன்ஒளி ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .

அதே வேளை இன்றைய தினம் வாகரை பிரதேசற்கு உட்பட்ட நான்கு முன்பள்ளிகளினதும்,கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐந்து முன்பள்ளி களினதும் நிர்வாகக்திற்குரிய அனைத்து செலவுகளையும் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க தென்கயிலை ஆதீனம், அன்பேசிவம். சிவனருட்சபை பொறுப்பேற்றுக் கொண்டது .

அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்- பிரான்ஸ்
தென்கயிலை ஆதீனம்.
அன்பேசிவம்