NEWS

யாழ் நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம்; தவத்திரு வேலன் சுவாமிகளின் சிவகுரு ஆதீனம்

யாழ் நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம்; தவத்திரு வேலன் சுவாமிகளின் சிவகுரு ஆதீனம்

29-11-2020 ஞாயிற்றுக்கிழமை யாழ் நல்லை மண்ணில் சிவனருள் கொண்டு புதியதோர் சிவகுரு ஆதீனம் உதயமாகியது.

ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகும் இத்தருணத்தில் ஆன்ம வெளிக்கு அருமருந்தாய் தவத்திரு வேலன் சுவாமிகளின் சிவகுரு ஆதீனம் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதம் என்றாலே தமிழர்களின் மண்ணிலும் மனங்களிலும் தீப ஒளியாய் திக்கெட்டும் ஒளிரும் காலம். தமிழனுக்கு சக்தி மயமானதாகவும் பக்தி மயமானதாகவும் விளங்கும் கார்த்திகையில் கார்த்திகைப் பாலன் முருகனே உருவாகி வந்த நேரமதில் ஊரெல்லாம் ஒளி மிளிர, தமிழர் உலகெலாம் மனம் குளிர உதயமாகியது சிவகுரு ஆதீனம்.

அங்குரார்ப்பண நிகழ்வின் போது, 29-11-2020 காலை 10 00 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில், நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகளின் குரு பீடமாக உதயமான சிவகுரு ஆதீனத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது .

ஞானத்தைப் போதிக்கும் மடமாகவும், தமிழே அறிவாகவும் அரனே வடிவாகவும் உதயமான சிவகுரு ஆதீனமானது, அண்ணா மலையான் சோதி வடிவமாக காட்சி தரும் நன்நாளில் எங்கள் நிலமெங்கும் ஆன்மீக ஒளித்திரளாய் அமைகிறது.

நல்லோர் மனதில் நாளாந்தம் எழுந்த கேள்விகளுக்கு கார்த்திகைப் பாலன் திருநாளில் விடை தந்துள்ளார், நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள்.