வாழ்த்துச் செய்தி; முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு. அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம்

வாழ்த்துச் செய்தி; முதற்குரு மகாசந்நிதானம்
தவத்திரு. அகத்தியர் அடிகளார்
தென்கயிலை ஆதீனம்
திருகோணமலை
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
‘இறையொடு ஒன்றல் இறுதி நிலை’
அப் பேரானந்த நிலைபெற, மனிதத்தை நெறிப்படுத்தும் வண்ணமாய் சைவமும் தமிழும் திகழும் யாழ் மண்ணில் உதிக்கின்றது ஓர் ஆதீனம்.
தவத்திரு வேலன் அடிகளாரால், நல்லை மண்ணில் நிறுவப்படும் ஆதீனமானது, ஆன்மீக உலகுக்கு பெரும் பேறாம்.
தமிழொடு சைவமும் தவழும் மண்ணில் ஞானமும் பக்தியும் ஓங்கும் வண்ணம்
அடிகளாரால் உருவாகும் ஞானத் திருமடமானது, வையமெங்கும் ஆன்மீக ஒளிமயமாக்கும்.
இந்த ஆதீனமானது, நல்லைக் கந்தன் அருளாலும் அவன் தந்தை சிவனார் அருளாலும் நிறைஞானம் பரப்ப கோணேஸ்வரப் பெருமானின் பேரருளை வேண்டுகிறோம் .
-அன்பே சிவம்-