About Us
சிவஒளி பற்றிய ஓர் பார்வை.
ஓம் நமசிவாய.
திரிகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் உத்தியோகபூர்வ ஆன்மீக மின்னிதழாக சிவ ஒளி மாதாந்தம் வெளிவருகின்றது. அண்மையில் ஏற்பட்ட பெருந்தொற்றுக் காரணத்தினால் இரண்டு மாதத்திற்கு ஒரு இதழாக வெளிவருகின்றது. 2021 தை மாதத்திலிருந்து தொடர்ந்து மாதாந்தம் வெளிவரும் என்னும் நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.
சிவஒளி பல சவால்களுக்கு மத்தியில் , பல நேரப்பளுக்களுக்கு மத்தியில் , இயற்கை தரும் தடைகளுக்கு மத்தியில் உங்கள் எல்லோரது மனவெளிகளிலும் ஆன்மீக வெளிச்சத்தை பரப்பி வருகிறது.
சிவ ஒளியின் படைப்பாளிகளாக பல ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சை
சிவ ஒளி மின்னிதழ் வருவதற்கு முக்கிய காரணமாக தென்கயிலை ஆதீனத்தின் முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு. அகத்தியர் அடிகளார் அவர்களின் ஆலோசனையும் அடக்கமுடியாத பெருவிருப்பும் முதலிடம் பெறுகின்றது. அவர் எந்நேரமும் எமது மக்கள் மத்தியில் ஆன்மீக வாழ்வைப் பற்றி ஒழுகவேண்டுமென்றும், எதிர் காலச்சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் ஆன்மீக வரலாற்றுத் தடங்கள் என்னவென்ற கேள்வியே மனதில் அலைகளாக விரியும். பல நேரங்களில் நாம் அவருடன் பேசும் பொழுது சதா இது போன்ற எண்ணங்களையே விதைத்துவிடுவார்.
அண்மைக் காலமாக சைவத்திற்கும் சைவத்தின் இருப்புக்கும் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால், எம்மைப் போன்ற ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மக்களை நோக்கிச் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து அறநெறி சார்ந்த வழிகாட்டியாக நாம் மாற வேண்டும் என்று அடிக்கடி ஆலோசனை வழங்குவார்.
இது வரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிவ ஒளியை இணைய ,சமூக வலைத்தளங்கள் ஊடாக வாசித்து வருவதாக பல தரவுகள் மூலம் அறியப்படுகிறது. எனினும் இன்னும் பன்மடங்கு சிவனடியார்கள் பார்வைக்கு சிவ ஒளியைக் கொண்டு செல்ல வேண்டுமென்ற பேரவாவுடன் சிவ ஒளிக்குத் தனியான ஒரு இணையத் தளத்தை ஆரம்பித்துள்ளோம்.
கடமையுணர்வோடும் தமிழுணர்வோடும் ஆன்மீக சிந்தனையுடனும் சிவஒளியை வடிவமைப்பாளர் மோகன ஷாந்தியினுடைய பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட வேண்டியவை. சிவஒளி இணையத்தளம் உருவாகுவதற்கு வடிவமைப்பாளரின் ஆர்வமும் முக்கிய காரணமாக அமைகின்றது.
சிவ ஒளி மின்னிதழ் இன்னும் இன்னும் பல மடங்காக உங்கள் மத்தியில் வலம் வந்து நல்லதொரு ஆன்மீக விதைப்பாக மாறி வருவதற்கு தங்கள் அனைவரின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புக்களும் , ஆதரவுகளும் தேவையெனக் கூறி சிவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
அன்பே சிவம்
தென்கயிலை சிவா
தலைமை ஆசிரியர்
சிவ ஒளி